உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை படத்தில் காணலாம்.

ஜேடர்பாளையம் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

Published On 2022-08-05 09:06 GMT   |   Update On 2022-08-05 09:06 GMT
  • காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சோழசிராமணியில் காவிரி கரைப்பகுதியில் 2 வீடுகளுக்குள்வெள்ளம் புகுந்தது.
  • அந்த குடும்பங்களை சேர்ந்த 5 பேர் அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு வருவாய் துறையினர் அனுப்பி வைத்தனர்.

பரமத்திவேலூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சோழசிராமணியில் காவிரி கரைப்பகுதியில் 2 வீடுகளுக்குள்வெள்ளம் புகுந்தது. அந்த குடும்பங்களை சேர்ந்த 5 பேர் அவர்களின் உறவினர்கள் வீடுகளுக்கு வருவாய் துறையினர் அனுப்பி வைத்தனர்.

மேலும் கொத்தமங்கலம் கிராமம் அரசம்பாளையம் குடித்தெருவில் காவிரி கரையில் உள்ள 5 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதில் அந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர்களையும் நஞ்சப்பகவு ண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தலா 5 கிலோ அரிசியையும் வருவாய் துறையினர் வழங்கினர்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News