உள்ளூர் செய்திகள்

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 11 ஆண்டுக்கு பின் மலர் கண்காட்சி

Published On 2023-04-14 09:38 GMT   |   Update On 2023-04-14 09:38 GMT
  • ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
  • இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.

கோவை,

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.

துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

Tags:    

Similar News