உள்ளூர் செய்திகள்

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தியவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.

25-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.1,000 அபராதம் வசூல்

Published On 2022-12-23 09:38 GMT   |   Update On 2022-12-23 09:38 GMT
  • இருசக்கர வாகன ஓட்டிகள் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்த பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.
  • காவல்துறையினர் ஒரு வாகனத்திற்கு 1000 ரூபாய் என அபராதம் விதித்தனர்.

தருமபுரி,

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தருமபுரியில் இருந்து தென் மார்க்கமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, மற்றும் கிருஷ்ணகிரி, வேலூர், சென்னை, திருவண்ணாமலை, வெளி மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகிறது.

இந்த நிலையில் தினசரி இருசக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகள் என பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதால் பேருந்துகளில் பயணம் செய்ய பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கு இடையூ றாகவும், பேருந்துகளுக்கு இடை யூறாகவும், இருப்பதால் காவல்துறை பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கு இருசக்கர வாகனங்களுக்கும் கார், தள்ளுவண்டி ஆகிய வாகனங்களுக்கும் தடை விதித்துள்ளது.

பஸ் நிலையத்தில் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்தத்தின் அருகே மூலிகை பான கடைகள் உள்ளதால் இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை அருந்துவதற்காக தினசரி 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்துவதால் கிருஷ்ணகிரி மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிற்பதற்கு இடமின்றி நுழைவு வாயிலிலே நிறுத்துவதால் மற்ற பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு வழியின்றி வெளியே நிறுத்தப்படுகிறது.

இதனால் ஒருவழிப்பாதையான ஆறுமுக ஆச்சாரி ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பஸ் நிலையத்திற்குள் வரும் இருசக்கர வாகனங்களுக்கு தினசரி அபராதம் விதித்தாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அதை பொருட்படுத்தாமல் கிருஷ்ணகிரி பஸ் நிறுத்த பகுதியில் நிறுத்தி வருகின்றனர்.

இதேபோல் நேற்று புறநகர் பேருந்து நிலையம் கிருஷ்ணகிரி பஸ் நிருத்தத்தில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனை அறிந்த காவல்துறை இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு வந்ததை கண்டதும் மின்னல் வேகத்தில் பஸ் நிலையத்தில் இருந்து வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

அப்படி இருந்தும் 25-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையினர் ஒரு வாகனத்திற்கு 1000 ரூபாய் என அபராதம் விதித்தனர். மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பியதை அடுத்து கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை, இடையூறு இன்றி ஓட்டுநர்கள் நிறுத்தி எடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News