உள்ளூர் செய்திகள்

விலையில்லா சைக்கிள்களை முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். மூர்த்தி, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி ஆகியோர் வழங்கிய காட்சி.

பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-09-03 10:02 GMT   |   Update On 2022-09-03 10:02 GMT
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் கழக செயலாளருமான கருணாநிதி, பேரூராட்சித் துணைத் தலைவர் அன்பரசன், வழக்கறிஞர் இளங்கோ தி.மு.கவைச் சேர்ந்த சாமிநாதன்,தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News