உள்ளூர் செய்திகள்

மகளிர் தினத்தில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இலவச அனுமதி: வெளிநாட்டு பெண் பயணிகள் பாராட்டு

Published On 2023-03-08 16:36 GMT   |   Update On 2023-03-08 16:36 GMT
  • வழக்கமாக வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும்.
  • பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை வெளிநாட்டு பயணிகள் பாராட்டினர்.

மாமல்லபுரம்:

இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிளை சுற்றுலா பயணிகள் இலவசமாக உள்ளே சென்று பார்க்கலாம் என இந்திய தொல்லியல்துறை அறிவித்தது. இதையடுத்து அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்த்து ரசித்தனர்.

முதல் முறையாக மகளிர் தினத்தில் இலவசம் என்பதை மத்திய அரசு அறிவித்திருப்பது பெண்களுக்கு பெருமையாக இருப்பதாக அங்கு வந்த உள்நாட்டு பெண்கள் தெரிவித்தனர். வழக்கமாக, வெளிநாட்டு பயணிகள் ரூ.600 கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டும். ஆனால் மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்த்ததை நினைத்து, இந்திய நாட்டின் பெண்ணுரிமை, அவர்களுக்கான தனி மரியாதை, அங்கீகாரம், இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொது உரிமைகளை பாராட்டி சென்றனர்.

Tags:    

Similar News