உள்ளூர் செய்திகள் (District)

கந்தூரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாராக்கள்.

கந்தூரி விழா; வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாராக்கள்

Published On 2022-12-23 07:53 GMT   |   Update On 2022-12-23 07:53 GMT
  • 5 மினாராக்கள், அலங்கார வாசல் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
  • வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம்.

நாகப்பட்டினம்:

உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று பாய்மரம் ஏற்றப்பட்ட நிலையில் நாளை (24-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

விழாவை முன்னிட்டு தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாகூர் தர்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதனை கண்டு முஸ்லிம்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலமும், தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Tags:    

Similar News