உள்ளூர் செய்திகள்

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது

Published On 2023-02-02 09:56 GMT   |   Update On 2023-02-02 09:56 GMT
  • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
  • போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்

கோவை,

கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் ராஜேஸ்வரி நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 23), சுண்டக்காமுத்தூரை சேர்ந்த பூவேந்தன் (22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ேபாலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய ஆரோன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சரவணம்பட்டி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி தலைமையில் காளப்பட்டி ரோடு மகா நகர் மைதானம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கணபதியை சேர்ந்த ஜெயக்குமார் (25), மணியக்கார ன்பாளையதத்தை சேர்ந்த முகேஷ் கண்ணா (23) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 7 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதேபோல சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த மாரி என்ற மனோஜ் (22), விமல் (24), முரளி (30) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கவுதம் என்பவரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News