உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காயல்பட்டினம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்களை வழக்கம் போல இயக்க வேண்டும்- பயணிகள் கோரிக்கை

Published On 2022-07-23 09:02 GMT   |   Update On 2022-07-23 09:02 GMT
  • நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.
  • இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தினமும் பல்வேறு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்செந்தூருக்கும் அரசு பஸ்கள் சென்று வருகிறது.

திருச்செந்தூர்

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் அரசு பஸ்கள் கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், சோனகன்விளை வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.

இதில் நெல்லையில் இருந்து செல்லும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே குரும்பூரை அடுத்து ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூர் வரை செல்கிறது.

காயல்பட்டினம் வழியாக

இந்த அரசு பஸ்கள் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழியாக தினமும் காலையில் 9.15, 11.45, மதியம் 1.45, 2.45, 4.15, மாலை 5 மணி மற்றும் இரவு நேரங்களில் இயக்கபட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக காலை 11.45, 1.45, 2.45, 4.15 ஆகிய நேரங்களில் இயங்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

பயணிகள் வேதனை

இதனால் காலை 9.30 மணி அரசு பஸ்சை விட்டால் மாலை 5 மணிக்குதான் அடுத்த அரசுபஸ் உள்ளது.

இதனால் இப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சிலர் அவசரம் கருதி நகர பேருந்துகளில் திருச்செந்தூருக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது.

இதனால் தங்களுக்கு கூடுதல் பண செலவு மட்டுமின்றி அதிகநேர பயணம் செய்ய வேண்டி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே முன்புபோல பிற்பகல், மதியம் நேரங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News