ஊட்டியில் கிராம சபை கூட்டம்- கலெக்டர் அம்ரித் பங்கேற்பு
- நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.
- நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.
ஊட்டி:
சுதந்திர தினவிழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.இக்கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
சுதந்திர தினத்தி னையொட்டி, நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.
ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.
இவா்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியத்துடன் பல்வேறு கடனுதவிகளும், வங்கிகள் மூலமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், மகளிா் திட்டத்துறையின் சாா்பில், மகளிா் தங்கள் வாழ்வாதாரத்தினை உயா்த்தி கொள்வதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ஏராளமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிா்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.