உள்ளூர் செய்திகள்

கடையம் பெரும்பத்து ஊராட்சியின் கிராமசபை கூட்டம் 2-வது முறையாக ரத்து- கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவு

Published On 2023-03-17 09:14 GMT   |   Update On 2023-03-17 09:14 GMT
  • வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
  • இன்று ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கடையம்:

கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியின் பெயரை பஞ்சாயத்து நிர்வாகம் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாகக் கூறி மேட்டூர் பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கிராமசபை கூட்டம்

இந்நிலையில் கடந்த 15-ந்தேதி கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிபட்டியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் கிராமசபைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், சுரேஷ் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக குவிக்கப்பட்டனர்.இதற்கிடையே சிறப்பு கிராமசபை கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஒத்தி வைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (17-ந் தேதி) கடையம்பெரும்பத்து ஊராட்சி ஆசீர்வாதபுரம் சர்ச் தெருவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் இன்றும் கிராமசபைக்கூட்டத்தை 2- வது முறையாக மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ரத்து செய்து உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News