குமாரசாமிப்பேட்டையில் மயான கொள்ளை பெருவிழா
- சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வேடங்கள் அணிந்தும், பம்பை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை பெருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் பூமிதி திருவிழா நடந்தது. மாசி அமாவாசையை ஒட்டி, தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் ஏராளமான பக்கதர் கலந்து கொண்டு, தாழ் அலகு, முதுகு அலகு போட்டு கொண்டும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடியும், சக்கரம் போல் சுற்றும் தேரில் அமர்ந்தும், காளி, அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி வேடங்கள் அணிந்தும், பம்பை, மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
இதனை தொடர்ந்து தேர் ஊர்வலமாக சென்று தருமபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டில் மயான கொள்ளை சூறையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாட்டையடி வாங்கினர். மயான கொள்ளை சூறையாடுதல் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்.