தொடர் மழையால் செழித்து வளர்ந்து கிடக்கும் நிலக்கடலை செடிகள்
- நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது.
- இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சந்தூர். ஆனந்தூர், ஓலைப்பட்டி கொடமாண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆண்டு தோறும் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகின்றனர். இந்த நிலக்கடலை பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டில் பொருத்தமான மழை இல்லாததால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகள் அனைத்தும் வாடி, வதங்கி கருகும் நிலையை அடைந்தது.
இந்த ஆண்டு விவசாயிகள் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி விதைப்பில் முழு ஈடுபாட்டுடன் விதை நிலக்கடலை கடந்தாண்டை காட்டிலும் விலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதை பொருட்படுத்தாமல் வாங்கி விதைத்தனர். இந்த நிலையில் மழையின்றி நிலக்கடலை பயிர் வாடி வதங்கியது. இதை பார்த்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போச்சம்பள்ளி பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால், நிலக்கடலை பயிரிடப்பட்ட பகுதிகளில் கருகும் நிலையில் இருந்த செடிகள் மீண்டும் உயிர் பெற்று செழித்து வளர்ந்து காணப்பட்டது. இதனால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.