உள்ளூர் செய்திகள் (District)

நெல்லை, பாளையில் நாளை மறுநாள் 36 மையங்களில் குரூப்-1 தேர்வு

Published On 2022-11-17 09:32 GMT   |   Update On 2022-11-17 09:32 GMT
  • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
  • குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நாளை மறுநாள் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நெல்லை, பாளை வட்டங்களில் ராணி அண்ணா அரசு கல்லூரி, பேட்டை காமராஜர் மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி, நெல்லை சட்டக்கல்லூரி, சந்திப்பு ம.தி.தா இந்து மேல்நிலைப்பள்ளி, அரசு பொறியியல் கல்லூரி, ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 28 இடங்களில் 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுகளை 10,698 பேர் எழுத உள்ளனர். குரூப்-1 தேர்வையொட்டி தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 12 சுற்றுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுகளை பதிவு செய்ய 38 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தலை கண்காணிக்க 36 ஆய்வு அலுவலர்கள், சப்-கலெக்டர் நிலையில் 6 பறக்கும்படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்னர்.

மேலும் 19-ந் தேதி தேர்வு நடைபெறும் போது தேர்வு மையங்களில் தடை இல்லா மின்சாரம், பேருந்து வசதி ஆகியவற்றை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு அறையினுள் தேர்வர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News