விழிப்புணர்வு கருத்தரங்கில் அரங்குகள்-நேரு நர்சிங் கல்லூரிக்கு 2-ம் பரிசு
- சாலை பாதுகாப்பு மாதிரி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங் களும் கண்காட்சியில் மாணவர்களிடம் பெற செய்திருந்தனர்.
- மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகமும், ஊக்கமும் அளிக்கப்பட்டது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் நேரு நர்சிங் கல்லூரி சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை சாலை பாதுகாப்பு மாதிரி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங் களும் கண்காட்சியில் மாணவர்களிடம் பெற செய்திருந்தனர்.
ஏறத்தாழ 40 அரங்குகள் இடம் பெற்று இருந்த நிலையில் நேரு நர்சிங் கல்லூரியின் அரங்கு இரண்டாம் பரிசை வென்றது. மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் 4-ம் ஆண்டு மாணவி ரோஷ்மி ஜோஸ் முதல் இடத்தையும், ஓவியப் போட்டியில் முதலாம் ஆண்டு மாணவி நர்மதா தேவி மூன்றாம் இடத்தை யும் வென்றனர். நேரு நர்சிங் கல்லூரி தாளாளர் டி.டி.என். லாரன்ஸ், கல்லூரி தலைவர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகமும், ஊக்கமும் அளித்தனர்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையேற்று நடத்தினார். பேச்சாளர் ஜெகன் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினார்.