உள்ளூர் செய்திகள்

புவனகிரியில் போலியான பெயரில் டீத்தூள் விற்பனை செய்தடீலர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு

Published On 2023-06-14 07:17 GMT   |   Update On 2023-06-14 07:17 GMT
  • ஆனந்தசபேசன் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார்.
  • டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர்.

கடலூர்:

சிதம்பரத்தை சேர்ந்தவர் ஆனந்தசபேசன் (வயது 36) இவர் அதே பகுதியில் தனியார் டீத்தூளை சில்லரை விலைக்கும், மொத்த விலைக்கும் விற்பனை செய்து வருகிறார். இவர் சிதம்பரம், சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளான புவனகிரி, வீரப்பாளையம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய கடை மற்றும் பெரிய அளவிளான கடைகளுக்கும் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக இந்த பகுதிகளில் விற்பனை செய்யும் டீத்தூள் மாத விற்பனை குறைந்து வருகிறது.  

இதனால் இந்த பகுதியில் விற்கும் டீத்தூளில் கலப்படம் இருக்கலாம் என்று அந்த டீத்தூளை ஆய்வுக்கு அதிகாரிகள் அனுப்பினர். இந்த ஆய்வில் போலியான டீத்தூள் என்பது உறுதியானது. இதனையடுத்து புவனகிரி ேபாலீசார் புவனகிரியில் டீத்தூள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களான கோவிந்தராஜன் (58), ராஜா (32), இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் எங்களுக்கு மொத்த விலைக்கு டீத்தூள் இங்கு கிடைக்கவில்லை அதனால் சிதம்பரத்திலுள்ள டீத்தூள் விற்பனை செய்யும் டீலர் ஆனந்தசபேசன் என்பவரிடம் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம் என்று கூறினர். 

இதனால் போலீசார் சிதம்பர த்திற்கு விரைந்தனர். அங்கு போலீசார் டீலர் ஆனந்தசபேசனை பிடித்து விசாரணை செய்ததில் இந்த டீத்தூளை கரூரில் இருந்து வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறேன் என்று கூறி யதி ன்பேரில் 3 பேரையும் சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகு பதி, சேத்தி யா தோப்பு டி.எஸ்.பி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகி ன்றனர்.

Tags:    

Similar News