ஜாதி சான்றிதழ் வழங்க மலைக்குறவர்கள் வலியுறுத்தல்
- உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நொச்சியூர் கிராமத்தில் "இந்து மலைக்குறவர்" இனத்தை சேர்ந்த 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறுகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 11 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.
தங்கள் ஜாதியை தவிர்த்து பொய்யாக பிற ஜாதி பெயரை தங்களின் அடையாளமாக சான்றிதழ் பெற்றால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.
அந்த காலத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தங்களின் முன்னோர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை.
ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்வதால் சாதி,மத, இருப்பிட சான்றிதழ்கள் தேவை கட்டயாமாக உள்ளது.
எனவே நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.