ஆறுமுகநேரியில் இந்து சமய வகுப்பு ஆண்டு விழா - போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
- முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது.
- இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் ஸ்ரீ நடராஜ தேவார பக்த ஜனசபைக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் நந்தவனத்தில் தெய்வீக சத் சங்கம் மற்றும் இந்து சமய வகுப்பின் ஆண்டு விழா 2 நாட்கள் நடைபெற்றன.
முதல் நாளில் இந்து சமய வகுப்பு குழந்தைகளுக்கான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது. இதனை பேராசிரியர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். மாலையில் சோமநாத சுவாமி கோவில் பக்தஜன சபை நிர்வாகி தெரிசை அய்யப்பன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்து சமய வகுப்பு ஆசிரியர் ஜெயராஜ், ஜோதிடர் வேலாயுதம் ஆகியோர் தெய்வீக பாடல்களை பாடி விளக்கம் அளித்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நடராஜ தேவார பக்த ஜன சபையின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றன. அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் கோலாட்டம், ஒயிலாட்டம், மற்றும் சிலம்பாட்டம் நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகளான லிங்கதாஸ், கார்த்திகேயன், சுரேஷ், செல்வகுமார், திருமால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சிவராமன், சோமு, பன்னீர்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.