உள்ளூர் செய்திகள்

ஓசூர் அரசு பெண்கள் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா

Published On 2022-11-29 09:43 GMT   |   Update On 2022-11-29 09:43 GMT
  • தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.
  • மேயர் எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஓசூர், 

ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி, மா ணவர்களை மென்மையான வர்களாகவும், உயிர்ப்புள்ள வர்களாகவும் மாற்றும் சக்திமிக்க பலதரப்பட்ட கலைவடிவங்களில், அவர்களது தனித்திறனை வெளிக்கொணரும் வகையில், தமிழக கலைத்திரு விழா நடைப்பெற்றது.

இதில் மாணவியர்கள் கலந்து கொண்டு நாட்டியம், நடனம் ஆகிய பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர்.

இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவியருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

துணை மேயர் ஆனந்தய்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எல்லோரா மணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கோவிந்தராஜ், முனிராஜ் , ஒசூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கஜேந்திர மூர்த்தி, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியை லதா, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News