மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலைப்பாதையில் தொடரும் விபத்துகளை கட்டுப்படுத்துவது எப்படி?
- சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைக்க நடவடிக்கை
- மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
அருவங்காடு,
மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையிலான மலைப்பாதையில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. குன்னூர் மலைப்பாதையில் கடந்த 54 நாட்களில் நடந்த சாலை விபத்துக்களில் 9 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கடந்த மாதம் 30-ந்தேதி மரப்பாலம் அருகே தென்காசி மா வட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் 9 பேர் பலியாயினர். 30 பேர் காயம் அடைந்தனர். இந்த மாதம் 8-ந்தேதி மலைப்பா தையில் சென்ற ஒரு சுற்றுலா பஸ் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணித்த மாணவ மாணவிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
மேலும் கடந்த 10-ந் தேதி நடந்த கார் விபத்தில் கூடலூரை சேர்ந்த சிறுமி உட்பட 2 பேர் காயம் அடைந்தனர். பர்லியாறு பகுதியில் ஒரு சுற்றுலா பஸ் விபத்துக்கு உள்ளாகியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாவட்டத்துக்கு வரும் ஒருசில சுற்றுலா பஸ்கள் மலைப்பாதையில் செல்லும்போது விபத்துக்கு உள்ளாகும் சம்பவம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதும க்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு சமவெளி பகுதியில் இருந்து எண்ணற்ற சுற்றுலா பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் வெளிமாநிலம், வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கார்கள் மூலம் வந்து செல்கின்றனர்.
நீலகிரிக்கு சுற்றுலா வரும் டிரைவர்கள் பெரும்பாலும் போக்கு வரத்து விதிகளை பின்பற்றுவது இல்லை.
அவர்கள் சம வெளி பகுதியில் செல்வது போல வாகனங்களை வேகமா கவும், கவனகுறை வாகவும் இயக்குகின்றனர். இதனால் மலைப்பாதையின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்படும் வாக னங்கள் மலைப்பாதையில் கீழ்நோக்கி செல்லும்போது அதிவேகமாக செல்வதுடன் பிரேக் மற்றும் கிளட்ச் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இதனால் டயர்களில் உள்ள டிரம் சூடாகி பிரேக் நிற்பதில்லை. இதனால் வாகனங்கள் கட்டுப்பா ட்டை இழந்து விபத்து ஏற்படும் சூழல் தொடர்க தையாக உள்ளது.
குறிப்பாக மலைப்பா தையில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தை தவிர்த்து மிகுந்த கவனத்து டன் 20 முதல் 30 கி.மீ வேகத்தில் சென்றால் பாதிப்புகள் நிகழாது. இதற்காக அங்கு பிரத்யேக சாலை விதிகள் உள்ளன.
இருந்தபோதிலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பின்பற்றுவது இல்லை. பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் விபத்துகள் மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே சுற்றுலா பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீசார் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கல்லாறு மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதி களில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக மலைப்பாதையில் உள்ள சாலை விதிகள் மற்றும் வாகனங்களை எவ்வாறு பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.