உள்ளூர் செய்திகள் (District)

சாலை பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தங்கராஜ்.

ரூ.1.5 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலை பணி- கோட்ட பொறியாளர் ஆய்வு

Published On 2022-08-03 09:26 GMT   |   Update On 2022-08-03 09:26 GMT
  • சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர்.
  • சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா மற்றும் உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை ரூ.1கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சாலை மேம்படுத்தப்பட்ட பணியை நெடுஞ்சாலை துறையின் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலா, சாலை ஆய்வாளர் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் விமல் ஆகியோர் புத்தூரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர். பின்னர் கோட்ட பொறியாளர் தங்கராஜ் கூறுகையில், சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது என்றார். சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News