உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம்

Published On 2022-12-02 09:45 GMT   |   Update On 2022-12-02 09:45 GMT
  • தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.
  • ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், துணைத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் பழுதடைந்துள்ள 486 எல்இடி விளக்குகளை மாற்றம் செய்வது, ரூ. 60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 9,11,12 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைப்பது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் குப்பையை தரம் பிரிக்கும் கூடம் அமைத்தல், தேவராஜன் ஏரிலிருந்து உபரிநீர் செல்லும் ராஜகால்வையை தூர் வாருவது உள்ளிட்ட பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து குடிநீர் விநியோகம், சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News