உள்ளூர் செய்திகள் (District)

ஓசூரில், வடக்கு சரக அளவிலான கைப்பந்து போட்டிகள்

Published On 2022-08-18 10:07 GMT   |   Update On 2022-08-18 10:07 GMT
  • போட்டிகளை, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார்.
  • வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் பரிசு களை வழங்கினர். மேலும் மாணவர்கள் அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

ஓசூர்

ஓசூர் வடக்கு சரக அளவிலான, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான கைப்பந்து போட்டிகள், ஓசூர் - பாகலூர் சாலையில் உள்ள யோகி வேமனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், வடக்கு சரகத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

போட்டிகளை, ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆய்வாளர் பிரபாவதி மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் மாணவ, மாணவியரை வாழ்த்தினர்.

போட்டிகளை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, பள்ளியின் தலைவர் ஜி.எம்.ரெட்டி, செயலாளர் கிருஷ்ணாரெட்டி, அரிமா சங்க மூத்த தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி, பொருளாளர் கிருஷ்ணாரெட்டி, ரவிவர்மா, பள்ளி முதல்வர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் பரிசு களை வழங்கினர். மேலும் மாணவர்கள் அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

மேலும் போட்டிக்கான ஏற்பாடுகளை, பள்ளி மேலாளர் மஞ்சுநாத், புக்கசாகரம் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மாது, கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில், உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News