கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி
- கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக நிய–மனம் செய்யப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் பணி ஒருங்கிணைப்பாளர்கள் 39 பேருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி னார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குதல், பணியாளர் களுக்கான ஊதியம் குறித்த புகார்களை தீர்த்து வைத்தல், நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு பணி வழங்குதல், புதிய நபர்களை பதிவு செய்து அதற்கான வேலை அட்டை வழங்குதல், பணித்தளத்தில் வேலை ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப் பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், கார்த்திகேயன், மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.