காவேரிப்பட்டணத்தில் 145-வது ஆண்டு எருது விடும் விழா
- விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
- நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள சக்தி விநாயகர் கோவில் முன்பு 145-வது ஆண்டு எருது விடும் விழா நடைபெற்றது.
இதனை ஊர் கவுண்டர் மகேந்திரன் எருதுவிற்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார். இருபதுக்கும் மேற்பட்ட எருதுகள் கோயிலை சுற்றி வலம் வந்தன. எருதுகளை பிடிக்க 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.
காவேரிப்பட்டினத்தை சுற்றியுள்ள கருகன்சாவடி, ஜமேதர் மேடு , நரிமேடு , சந்தாபுரம் ,காவேரிப்பட்டணம் மற்றும் நாயுடுகள் நல சங்கம் , வாணியர் நல சங்கம் வன்னியர் குல சத்திரியர்கள் சார்பில் எருதுகள் விடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் .அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர் கவுண்டர் பெருமாள் சார்பாக ஊர் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் வக்கீல் ரவிச்சந்திரன், சின்னசாமி, தி.மு.க. பேரூர் கழக செயலாளர் ஜே .கே. எஸ். பாபு , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், அருள், தவமணி,பசுபதி,சார்லஸ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் இருவருக்கு மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில்அனு மதிக்கப்பட்டுள்ளனர்.