உள்ளூர் செய்திகள்

நாகையில் பெண்கள் குறுவை நடவு பணி நடந்தது.

விவசாய பெண்கள் களைப்பு தீர கிராமிய பாடல்கள் பாடி நடவு நட்டனர்

Published On 2023-08-04 09:40 GMT   |   Update On 2023-08-04 10:32 GMT
  • கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
  • களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.

நாகப்பட்டினம்:

தமிழகத்தில் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நாகை , திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.

குறிப்பாக காவிரி கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுப்பட்டனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் விதைத்த நெல் மணிகள் கருகியும், முளைப்புத் தன்மையும் இல்லாமல் போனதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இருந்தும் மனம் தளராத விவசாயிகள் இயற்கையின் மீதான நம்பிக்கையில் ஆடிப்பட்டம் தேடி விதைக்கனும் என்ற முது மக்களின் சொல்லாடலுக்கு ஏற்ப தற்போது குறுவை நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று ஆடி 18 என்பதால் விவசாயிகள் தங்களுடைய வயல்களில் வழிப்பட்டு நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது நடவுப் பணிகளில் ஈடுப்படும் பெண்கள் வெயில், களைப்பு தெரியாமல் இருக்க சினிமா, கிராமிய பாடல்களை பாடியபடி நடவுப் பணிகளில் ஈடுப்பட்டனர்.

ஒரு பெண் ராகம் இழுத்து பாட அதை மற்றப் பெண்கள் கோரஸாக வாங்கி உற்சாகமாக பாடி மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News