ஊட்டியில் தெருக்களில் சுற்றி திரியும் குதிரைகள்
- பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இதனால் எந்த நேரமும் அந்த சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.
இப்படிப்பட்ட சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இந்த கால்நடைகளால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுவதை வாடிக்கயைாக உள்ளது. சில நேரங்களில் நடந்து செல்லும் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
எனவே கால்நடைகள் சாலைகள் சுற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டு கொண்டனர். அதன்பேரில் ஊட்டி நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் பலமுறை எச்சரித்தும் பல அபராதங்கள் விதித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.
இந்த நிலையில் ஊட்டி 21-வது வார்டு இரட்டை பிள்ளையார் கோவில் அருகே உள்ள தெருக்களில் குதிரைகள் சாலையை வழி மறித்து சுற்றி கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொண்டும் உள்ளன.இதனால் அந்த வழியாக செல்ல பாதசாரிகள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். எனவே மக்களை அச்சுறுத்தும் வகையில் இடையூறாக அலைந்து கொண்டிருக்கும் குதிரைகளை பிடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.