உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு கல்லூரியில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுகள் நடைபெற்றன. தேர்வினை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. 

சேலம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 11,238 பேர் எழுதினர்

Published On 2022-11-19 10:11 GMT   |   Update On 2022-11-19 10:11 GMT
  • சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
  • குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த குரூப் -1 தேர்வு எழுத 18 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்ட முழுவதும் 42 மையங்கள் அமைக்கப்பட்டு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 8:30 மணிக்குள் தேர்வர்கள் அனைவரும் மையங்களுக்கு வந்தனர். அவர்களின் நுழைவு சீட்டை சரிபார்த்து அலுவலர்கள் உள்ளே அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு பணியில் 16 பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில், தேர்வை வீடியோவில் பதிவு செய்தனர். தேர்வு எழுத செல்வோருக்கு சிறப்பு பஸ்கள், மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. குரூப் - 1 தேர்வை மாவட்டம் முழுவதும் 11,238 பேர் எழுதினர். 7,440 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Tags:    

Similar News