உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 9 மாதங்களில் 324 பேரின் லைசன்ஸ் ரத்து

Published On 2022-10-18 09:56 GMT   |   Update On 2022-10-18 09:56 GMT
  • வாகன விபத்துக்களை குறைக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
  • வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சேலம்:

தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக தொடர்ந்து போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுகிறது

இந்த நிலையில் அதிக வேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களின் லைசன்சை ரத்து செய்ய போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகின்றனர்.

வாகன விபத்தை குறைக்கும் வகையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், பர்மிட், தகுதிச்சான்று இல்லா மல் இயக்கப்படும் வாக னங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் போலீசாரின் பரிந்துரையின் பேரில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 324 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிமாக வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. சேலம் சரகத்தில் கடந்த 9 மாதத்தில் விபத்துக்களால் உயிரிழப்பை ஏற்படுத்திய 324 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ள்ளது. இதுபோன்ற நட வடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்றனர்.

Tags:    

Similar News