தஞ்சையில், ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி- மேயர் தொடங்கி வைத்தார்
- 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.
- கலந்து கொண்ட நடனக்கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சைப்பெரிய கோவில் வளாகம் பெத்தண்ணன் கலையரங்கில் தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் ஆந்திர மாநில பரதநாட்டிய நிகழ்ச்சி தொடக்க விழா நடை பெற்றது.
பெரிய கோயில் சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
துரை.கோவிந்த ராஜ் (அறநிலைத்துறை பணி ஓய்வு) வரவேற்பு ரையாற்றினார். தேசிய திருக்கோயில்கள் கூட்ட மைப்பு சார்பில் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை டெல்லி தமிழிலக்கிய பேரவை நண்டர் குமார் ஒத்துழைப்போடு தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் ஆதி. நெடுஞ்செழியன் செய்திருந்தார்.
நடனக்கு ழுவின் குரு தனவெட்சுமி நன்றி கூறினார்.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள நடன நிகழ்ச்சியில 150 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாட உள்ளார்கள்.
இன்றைய நிகழ்ச்சியில் மாநகர மேயர், சதயவிழாக்குழுத்தலைவர், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தென்மா நிலங்கள் பொது செயலர் சந்திரபோஸ் கலந்து கொண்டு நடனக்கலை ஞர்களுக்குச் சான்றிதழ் வழங்க உள்ளனர்.