உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கோலங்கள் வரைந்த பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சையில், விழிப்புணர்வு கோலப்போட்டி

Published On 2023-03-13 10:01 GMT   |   Update On 2023-03-13 10:01 GMT
  • வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.
  • பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை ஒவ்வொரு கோலத்திற்கும் தலைப்பிட்டனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவியது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் கலந்துரையாடி வடமாநிலத்தவர்கள் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என கூறி ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் நாஞ்சிக்கோட்டை சாலை, ரெத்தினசாமி நகரில் உள்ள சேகர் காலனியில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வடமாநில மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் வீட்டு வாசலில் தமிழ்நாட்டை நம்பினோர் கைவிடப்படார், யாதும் ஊரே யாவரும் கேளிர், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர், எல்லோரையும் வாழ வைக்கும் தமிழ்நாடு போன்ற பல்வேறு வாசகங்களை ஒவ்வொரு கோலத்திற்கும் தலைப்பிட்டு வண்ண கோலமிட்டனர்.நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு கோலங்கள் வரைந்த பெண்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வை யில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News