உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், மாநகராட்சி சார்பில் தூய்மை பொங்கல் கொண்டாட்டம்
- தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.
- தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று பழைய பஸ் நிலையம் அருகே தூய்மை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பொங்கல் விழாவில் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தஞ்சைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொங்கல் இட்டனர்.
தொடர்ந்து பானை உடைக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாடலுக்கு நடனமாடி கொண்டாடினர். அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.