உள்ளூர் செய்திகள்

போட்டியை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், பெண்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Published On 2023-03-11 10:09 GMT   |   Update On 2023-03-11 10:09 GMT
  • தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.
  • வருகிற 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

தஞ்சாவூர்:

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. அதேபோல் 2022-2023 ஆம் ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

பெண்களின் நல்வாழ்வுக்கு விளை யாட்டு, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி பங்களிக்கிறது என்றும் இது சம்பந்தமாக விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கையில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் உட்பட அனைத்து வயதினருக்கும் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றது.

அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட அளவிலான மகளிருக்கான தடகள போட்டிகள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் வயது வரம்பின்றி நடத்தப்பட்டன.

இப்போட்டியினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பபட உள்ளது. 15-ந் தேதி மகளிருக்கு வாலிபால் விளையாட்டுப் போட்டிகளும், 18-ந் தேதி பெண் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடகள போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.

இன்று நடந்த நிகழ்ச்சியில் பயிற்றுனர்கள் நீலவேணி (தடகளம்), தாரணி (பளு தூக்குதல்), ரஞ்சித் குமார் (நீச்சல்) மற்றும் மாவட்ட அளவிலான உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் தஞ்சாவூர் மாவட்ட கூடைப்பந்து பயிற்றுநர் பாபு நன்றி கூறினார்.

Tags:    

Similar News