உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. 

தஞ்சையில், சலங்கை பூஜை விழா

Published On 2023-01-06 10:01 GMT   |   Update On 2023-01-06 10:01 GMT
  • நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விழாவில் பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலயம் சார்பில் சலங்கை பூஜை விழா சங்கீத மகாலில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா தலைமை தாங்கினார்.

டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியை கற்பகம், பரதநாட்டிய கலைஞர் அருணாசுப்பிரமணியம், மார்னிங் ஸ்டார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அறிவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முத்ரா இசை நாட்டிய கலாலயத்தை சேர்ந்த ராதாமுரளிதரன் வரவேற்றார். விழாவில் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவிகள் ஹாசினி, சஹானா, ஸேர்லின்ஹன்சிகா, சிவ ஸ்ரேயா, ஹரிணி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுஷ்மிதா, தாமரை பன்னாட்டு பள்ளி மாணவி ஜெனிட்டாசெலினா, பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி மாணவி ஆதீஷா, சீனிவாசா உயர்நிலைப்பள்ளி மாணவி ஹரிணி, பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி ராகினி ஆகியோரின் சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் ராதாமுரளிதரனின் நாட்டுவாங்கம், ராஜாஸ்ரீவர்ஷனின் வாய்ப்பாட்டு, சதீஷ்குமாரின் மிருதங்கம், நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கதிரவன் வெங்கடசாமி ஒப்பனை செய்தார். நிகழ்ச்சியை வானதி தொகுத்து வழங்கினார். முத்ரா இசை மற்றும் நாட்டிய கலாலய செயலாளர் முரளிதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் பள்ளி மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News