உள்ளூர் செய்திகள்

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

தஞ்சையில், இன்று ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

Published On 2022-10-17 09:15 GMT   |   Update On 2022-10-17 09:15 GMT
  • தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
  • தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அறிவுறுத்தலின்பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெ ற்றது.

இதற்கு ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி டாக்டர் மங்களேஸ்வரி, ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி ஆட்கள் தேர்வு நடத்தினர்.

இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம். பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இதையடுத்து உயரம், மா ர்பளவு சரிபார்க்கப்பட்டது.

தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

இந்த தேர்வுகள் அனை த்தும் முடிந்த பின்னர் இதிலிருந்து 35 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்படும் ஊர் காவல் படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

Tags:    

Similar News