உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சையில், விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-02-21 09:56 GMT   |   Update On 2023-02-21 09:56 GMT
  • வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும்.
  • தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

தஞ்சாவூா்:

தஞ்சை ரெயிலடியில் இன்று காலை தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் தமிழ் பல்கலைக்கழக மாணவிகள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

அப்போது தமிழில் கையொப்பம் இடுவோம், வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

இதில் தமிழ் பல்கலைக்கழகம் துணை வேந்தர் திருவள்ளுவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News