உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் முகாமில்3 பேருக்கு பணி நியமன ஆணை

Published On 2023-02-28 09:47 GMT   |   Update On 2023-02-28 09:47 GMT
  • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
  • 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில், கலந்துகொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 225 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்கி, மனுக்களை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொன்னையார் கிராமத்தை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 3 பேரின், வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து, அவர்களின் கேரரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். அப்போது, 3 சக்கர சைக்கிள் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, உடனடியாக அவரது மனுவினை பரிசீலனை செய்த கலெக்டர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.9,500 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளை மாற்றுத்திறனாளிக்கு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

கூட்டத்தில் மரூர்ப்பட்டி பஞ்சாயத்து, கரட்டுப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கரட்டுப்பட்டி கிராமத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுகிறது.

அதன்படி, கோவில் முன், பந்தல் அமைத்தோம். அப்போது, ஒரு சிலர் வந்து, தடுத்ததுடன், அப்பகுதி, அவர்களுக்கு பாத்தியப்பட்டது, எனவே கோவிலை வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் உதவியுடன் பந்தல் அமைத்தோம்.

எங்கள் பகுதியில் உள்ள சிலர், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து, வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மேலும், எங்கள் கோவிலுக்கு பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News