வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தம்
- வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
- 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.