உள்ளூர் செய்திகள்

நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.



தொடர்விடுமுறையால் கூட்டம் அதிகரிப்பு கொடைக்கானலில் 5 கி.மீ தூரம் அணிவகுத்த சுற்றுலா வாகனங்கள்

Published On 2023-10-24 06:12 GMT   |   Update On 2023-10-24 06:12 GMT
  • இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.
  • பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

கொடைக்கானல்:

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தற்போது வருகை புரிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரி த்துள்ளதால் பிரதான சாலைகளான அப்ச ர்வேட்டரி சாலை , ஏரிச் சாலை, வத்தலக்குண்டு பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் வாகனங்கள் அணிவகுத்ததால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள் , தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, உள்ளிட்ட இட ங்களை கண்டு ரசித்தும் சில சுற்றுலாப் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்று லாப் பகுதிக்கு செல்ல முடியாமல் திணறல் அடை ந்தனர். தொ டர்ந்து கொடைக்கானலுக்கு வந்த சில சுற்றுலா பயணிகள் சுற்றுலா த்தலங்கள் அல்லாத வனப்பகுதிக்குள் சென்று வருகின்றனர் .

இதனை முறைப்படுத்த வனத்துறை யினர் எந்த ஒரு நடவடி க்கையும் எடுக்கவில்லை என்ற குற்ற ச்சாட்டும் எழுந்து ள்ளது. எனவே வனப்பகுதியில் அமை ந்துள்ள சுற்றுலா பகுதி களில் தற்காலிக பணியாள ர்களை நியமித்து க ண்காணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News