உள்ளூர் செய்திகள்

சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து வரும் தொழில் நிறுவனங்கள்

Published On 2023-05-29 09:54 GMT   |   Update On 2023-05-29 09:54 GMT
  • உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநிலத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு.
  • பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர்

கோவை,

தமிழகத்தில் முக்கிய தொழில் நகரமாக கோவை உள்ளது. ஆனாலும் இங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது குதிரை க்கொம்பாக இருக்கிறது. எனவே இங்கு உள்ள பல்வேறு தொழிற்சா லைகள், வடமாநில தொழி லாளிகளை வேலை க்கு அமர்த்தி உள்ளன.

உள்ளூர் தொழிலா ளர்களுடன் ஒப்பிடுகையில் வடமாநி லத்தவருக்கான சம்பளம் மிகவும் குறைவு. எனவே அவர்களுக்கு கோவை மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பொதுவாக பண்டிகை முடிந்த அடுத்த சில நாட்களில், அவர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி விடுவர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றவர்களில் 30 சதவீதத்துக்கும் மேற்ப ட்டோர் வேலைக்கு திரும்ப வில்லை. இது கோவை மாவட்ட தொழி ற்சாலை நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்கள் சொந்த ஊருக்கு சென்ற ஊழியர்களை மீண்டும் கோவைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பல்வேறு சலுகைகள் அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான வேலைகள் அப்படியே நிற்கிறது.

எனவே வடமாநில தொழிலாளிகள் கோவைக்கு உடனடியாக புறப்பட்டு வருவதற்கு ஏதுவாக, தொழிற்சாலைகள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அவர்களை விமானத்தில் திருப்பி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில், ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் பதிவு செ ய்யப்ப ட்டு வருகின்றன. வடமாநிலங்களில் வசிக்கும் தொழிலாளிகளை கோவைக்கு விமானத்தில் அழைத்து வரவேண்டும் என்றால், ஒருவருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் செலவு பிடிக்கும். கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு, வெளிமாநில ஆர்டர்களை குறிப்பிட காலத்துக்குள் முடித்து தரவேண்டும் என்ற காலவரையறை நிர்ணயிக்க ப்பட்டு உள்ளது. எனவே அந்த நிறுவனங்கள் கூடுதல் செலவை கருத்தில் கொள்ளா மல் வடமாநில ங்களில் வசிக்கும் தொழி லாளர்களை விமானத்தில் மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுக ளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Tags:    

Similar News