பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்யும் எந்திரம் பயன்பாட்டுக்கு தொடக்கம்
- சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கு.
- முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஈசானிய தெருவில் அமைந்துள்ளது.
இந்த குப்பை கிடங்கில் விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகளை பேக்கிங் செய்து எரிபொருளாக பயன்படுத்த அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்புவதற்கும் அபாயகரமான கழிவுகளை முறையான பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டுவதற்கும் குப்பைகளை அரைத்து உரமாக்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் முதிர் கொசுக்களை அழிக்கும் புகை அடிக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நகராட்சி மூலம் வாங்கப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் முன்னிலை வகித்தனர்.
சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் புதிய எந்திரங்களை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பாஸ்கரன், பாலமுருகன், முபாரக் அலி, ராமு, ரமாமணி, ராஜசேகர், ஜெயந்தி பாபு, கிருஷ்ணமூர்த்தி ராஜேஷ், நிர்வாகிகள் பந்தல்முத்து, திருச்செல்வன், மதியழகன், வெற்றி, செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.