உள்ளூர் செய்திகள்
பாளை அருகே தொழிலாளி வீட்டில் நகை-பணம் கொள்ளை
- தொழிலாளி குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்ற போது கொள்ளை நடந்துள்ளது.
- பீரோ உடைக்கப்பட்டு 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது39). தொழிலாளி.
இவர் குடும்பத்துடன் உறவினரை பார்க்க வெளியூர் சென்றுவிட்டார்.
நேற்று மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நெக்லஸ், 25 கிராம் கம்மல், வெள்ளி கொலுசு, ரூ. 20 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர்கள் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு பார்ைவயிட்டு கொள்ளையில் ஈடுபட்டவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.