உள்ளூர் செய்திகள்

கடத்தூர் கிரீன் பார்க்பள்ளி ஆண்டு விழா

Published On 2023-04-13 10:14 GMT   |   Update On 2023-04-13 10:14 GMT
  • மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.
  • விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் இயங்கி வரும் கிரீன் பார்க் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள்சங்க மாநில செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்குகிறார்.

கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் ராஜா வரவேற்புரை ஆற்ற உள்ளார். கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் முன்னிலை வகிக்கின்றார்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட அரசு வக்கீல்களின் உதவி இயக்குனர் சரவணப் பொய்கை மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், விஜயகுமார், கல்வியாளர்கள் அருண், டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். கிரீன் பார்க் கல்வி நிறுவனத்தின் துணை தலைவர் பூவிழிமுனிரத்தினம் நிகழ்ச்சி களை ஒருங்கிணைக்கிறார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

பள்ளி முதல்வர் சதானந்தம் நன்றியுரை ஆற்ற உள்ளார். பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொள்வதற்காக பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சேர்மன் முனிரத்தினம்அழைப்பு விடுத்துள்ளார். 

Tags:    

Similar News