உள்ளூர் செய்திகள்

திட்டக்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் அமைச்சர் சி.வெ. கணேசன், குத்து விளக்கு ஏற்றி னார். அருகில் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் பலர் உள்ளனர்.

திட்டக்குடியில் காணொளி மூலம் புதிய மகளிர் காவல் நிலையம் திறப்பு

Published On 2022-06-17 10:14 GMT   |   Update On 2022-06-17 10:29 GMT
  • காணொளி மூலம் புதிய மகளிர் காவல் நிலையம் திட்டக்குடியில் திறந்து ைவக்கப்பட்டது.
  • டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட புதிய மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

புதிய மகளிர் காவல் நிலையம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன முன்னிலையில் திறக்கப்பட்டது.

முதல் நாளில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணியிடம் ரூ.1லட்சம் ஒருவர் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், இது சம்பந்தமாக கடந்த 6 மாத காலமாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது பெண்ணாடம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அமைச்சரிடம் அழுதபடியே புகார் மனுவை அளித்தார்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மங்களூர் யூனியன் தலைவர் சுகுணாசங்கர், நகராட்சி சேர்மன் வெண்ணிலாகோதண்டம், நகராட்சி துணை தலைவர் பரமகுரு ,ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேதுராமன் மற்றும் தி.மு.க.

கட்சி நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News