உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள்

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 200 பக்தர்கள் தரிசனம்

Published On 2023-01-02 08:00 GMT   |   Update On 2023-01-02 08:00 GMT
  • புத்தாண்டு தினத்தில் குவிந்தனர்
  • பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப் பட்டு இருந்தது.

கன்னியாகுமரி:

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் நேற்று புத்தாண்டு தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடந்தது. பின்னர் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடந்தது. அதன் பிறகு 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப் பட்டு இருந்தது. அதன் பிறகு 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடந்தது. பின்னர் 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8.45 மணி முதல்9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடந்தது.

புத்தாண்டையொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவிலில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 200 பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர் இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News