உள்ளூர் செய்திகள்

மீனவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

குமரி கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து

Published On 2023-02-11 10:36 GMT   |   Update On 2023-02-11 10:36 GMT
  • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் முயற்சியால் இழப்பீடு வழங்கிய வெளிநாட்டு நிறுவனம்
  • விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி 

குளச்சல் மரமடித் தெருவை சேர்ந்தவர் ரெஸ்லின் டானி (வயது 38).இவர் அதே பகுதியை சேர்ந்த 4 பேருடன் பங்குதா ரராக சேர்ந்து விசைப்படகு வைத்து மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

கடந்த மாதம் 12-ந் தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து இவரது படகு ஆழ் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றது. 14-ந் தேதி மதியம் கன்னியாகுமரி கடல் பகுதி யில் 69 நாட்டிங்கல் கடல் மைல் தூரத்தில் இவர்களது படகு நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணை கப்பல் எதிர்பாராமல் விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படகிலிருந்த 14 மீனவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விரிசல் விழுந்தது.

படகின் உள் அறை களிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகு க்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு படகிற்கு தகவல் தெரிவித்து உதவிக்கு அழைத்தனர். அவர்கள் விரைந்து வந்து 14 மீனவர்களையும், அவர்க ளது விசைப்படகையும் மீட்டு குளச்சல் மீன்பிடித் துறைமுகம் அழைத்து வந்தனர். இது குறித்து ரெஸ்லின் டானி, குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், குளச்சல் நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோர் மூலம் பேச்சு வார்த்தை நடத்த கப்பல் நிறுவனம் முன் வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரச முடிவு ஏற்பட்டது. இதை யடுத்து விசைப்படகுக்கு சேத இழப்பீடு மற்றும் மீன வர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி குளச்சல் விசைப்படகு மீன் பிடிப்ப வர் நல சங்க அலுவலகத்தில் நடந்தது.

விசைப்படகுக்கு இழப் பீடாக ரூ.32 லட்சம், தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.57 ஆயிரம் வழங்கப்பட்டது. தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஜோசப் ஸ்டாலின் , கப்பல் நிறுவன பிரதிநிதி ஜாதோவிடம் இருந்து பெற்று மீன்பிடி தொழிலா ளர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் விசைப்படகு சங்க தலைவர் வர்கீஸ், செய லாளர் பிராங்கிளின், பொரு ளாளர் அந்திரியாஸ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மீண்டும் தொழிலுக்கு செல்ல சேதம டைந்த விசைப்படகை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.கப்பல் மோதி சேதமடைந்த விசைப்படகுக்கு துரிதமாக இழப்பீடு கிடைக்க முயற்சி செய்த தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கவுன்சிலர் ஜாண்சன் ஆகியோரை மீனவர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News