உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி முத்தாரம்மனுக்கு 1008 வளையல் அலங்காரம்

Published On 2022-08-03 06:54 GMT   |   Update On 2022-08-03 06:54 GMT
  • ஆடிப்பூரத்தையொட்டி நடந்தது
  • திரளான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதையொட்டி மூன்று முகம் கொண்ட முத்தாரம்மனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலையில் அம்மனுக்கு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

பின்னர் இரவு 8 மணிக்கு முத்தாரம்மனுக்கு 1008 வளையல்கள் அணிவிக்கப்பட்டு அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் நடந்தது. முன்னதாக விநாயகருக்கு முதல் பூஜை நடந்தது.அதன்பிறகு முத்தாரம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான உச்சிமாகாளி அம்மன், பைரவர் சுவாமி, சுடலை மாடசுவாமி, புலமாடசுவாமி, இசக்கி அம்மன், ஆகிய பரிவார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொணடு அம்மனுக்கு வளையல் வழங்கி வழிபாடு செய்தார்கள். பின்னர்பக்தர்களுக்கு அந்த வளையல் அருள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News