உள்ளூர் செய்திகள்

குமரியில் 1660 இடங்களில் நடந்த முகாமில் 17,668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

Published On 2022-09-12 07:02 GMT   |   Update On 2022-09-12 07:02 GMT
  • பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் போட்டுக்கொண்டனர்
  • தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்

நாகர்கோவில்:

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி மீண்டும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

குமரி மாவட்டத்திலும் 1660 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதல் டோஸ் தடுப்பூசி 82 சதவீதம் மட்டுமே செலுத்தி உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசி 72 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். செலுத்தாதவர்கள் விவர ங்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் முதல் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கழிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு அதிகமான இளைஞர்கள், இளம்பெண்கள், வாலிப ர்கள் வந்திருந்தனர்.

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மிக குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். முதல் டோஸ் தடுப்பூசி 39 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 140 பேரும், 3-வது தவணை தடுப்பூசி 1112 பேரும், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒருவரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 9 பேர் என 1301 மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மேல்புறம் யூனியனில் அதிகபட்சமாக 2656 பேருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2319 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர்.

தோவாளை தாலுகாவில் குறைந்தபட்சமாக 1154 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 949 பேர் பூஸ்டர் தடுப்பூசியும், 50 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 153 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த தடுப்பூசி முகாமில் 995 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1880 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும், 14683 பேர் 3-வது தவணை தடுப்பூ சியும் செலுத்தியுள்ளனர்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 22 பேரும், 12 முதல் 14 வயது உட்பட்டவர்கள் 88 பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 17668 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அதிகமான நபர்கள் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளது தெரியவந்துள்ளது தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News