கன்னியாகுமரியில் பாதுகாப்பு வளையத்தில் பகவதி அம்மன் கோவில்
- 33 அதிநவீன சுழலும் கேமிராக்கள் அமைப்பு
- ரூ.5 லட்சம் செலவில் பணி நடந்து வருகிறது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட கோவில் ஆகும்.
இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் பகவதி அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. இது தவிர கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி , இந்திரா காந்த விநாயகர் சன்னதி, பால சவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர் மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தா சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்து உள்ளன.
இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இந்தக் கோவில் பக்தர்களின் தரிசனத் திற்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இந்த கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக கோவில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிர காரங்களில்ரூ.5 லட்சம் செலவில் 33 அதிநவீன சுழலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தம் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே இருந்த 18 பழுதடைந்த கண்கா ணிப்பு கேமராக்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கண்கா ணிப்பு கேமராக் கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.