உள்ளூர் செய்திகள்

சுருளோட்டில் 47.2 மில்லி மீட்டர் மழை

Published On 2023-08-31 06:40 GMT   |   Update On 2023-08-31 06:40 GMT
பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து சற்று உயர்ந்தது

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் மழை பெய்தது. சுருளோட்டில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 47.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலிலும் நேற்று மாலையில் மழை பெய்தது. இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, வடசேரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. மலையோர பகுதி யான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையின் காரணமாக வெப்பம் சற்று தணிந்துள் ளது. பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக உள்ளது. அணைக்கு 470 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 28.30 அடியாக உள்ளது. அணைக்கு 67 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட் டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சுருளோடு 47.2, பூதப் பாண்டி 10.2, கன்னிமார் 4.2, மயிலாடி 10.4, நாகர்கோவில் 11.4, பெருஞ்சாணி 1.8, புத்தன் அணை 1.6, மாம் பழத்துறையாறு 21.4, ஆரல்வாய்மொழி 13.4.

நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையில் வழக்கம்போல் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்தது.

Tags:    

Similar News