உள்ளூர் செய்திகள்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க குழு அமைக்க வேண்டும் - கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு

Published On 2023-04-15 08:05 GMT   |   Update On 2023-04-15 08:05 GMT
  • 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணி புரியும் இடத்தில் பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக குழு அமைக்க வேண்டும்
  • சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதத்துக்காக ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் இடங்களான அனைத்து அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் (மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளிக்கடைகள்) தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணி புரியும் பட்சத்தில் அங்கு பாலியல் வன்கொடுமையை தவிர்ப்பதற்காக உள்ளக குழு அமைக்க வேண்டும். இந்த குழுவானது 4 உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும்.

மொத்த உறுப்பினர்களில் பாதிபேர் பெண்களாகவும், இதன் அலுவல் காலம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றத்திற்குரியதாகவும் அமைக்க வேண்டும்.

இவ்வாறு குழு அமைக்க தவறினால் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதத்துக்காக ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும். உள்ளக குழு வானது பணிபுரியும் இடங் களில் பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசார ணைக்கு துணை புரிய வேண்டும்.

பெண்களுக்கு தங்கள் பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏற்படும் நிலை யில் இந்த குழு மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். பணி புரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார் மனுக்களை பெறுவதற்கு அந்தந்த நிறுவனங்களில் புகார் பெட்டி வைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரம் அறிய மாவட்ட கலெக்டர் அலு வலக இணைப்பு கட்டி டத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவல கத்தை நேரிலோ அதன் தொலைபேசி எண்ணான 04652-278404 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News